மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சியை விற்றவருக்கு சிறை

 நெதர்லாந்தில் குதிரை இறைச்சியை பதிலாக மாட்டிறைச்சியை விற்பனை செய்த வியாபாரிக்கு இரண்டரையாண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...







 நெதர்லாந்தில் குதிரை இறைச்சியை பதிலாக மாட்டிறைச்சியை விற்பனை செய்த வியாபாரிக்கு இரண்டரையாண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பாவில் ஏற்பட்ட மோசமான உணவு மோசடி சம்பவங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

வில்லி செல்டன் என்ற அந்த வணிகர் மீது, ஆவணங்களை மாற்றியமைத்த குற்றம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 300 டன் குதிரை இறைச்சியை இவர் இறக்குமதி செய்து பதப்படுத்தியுள்ளார். பின்னர் அதை மாட்டிறைச்சி என்று அவர் விற்றுள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஐயர்லாந்து மற்றும் பிரிட்டனில் உள்ள பெரிய அங்காடிகளில் விற்கப்பட்ட பர்கர்களில் மரபணு சோதனை நடத்தப்பட்டபோது, இந்த மோசடி தெரியவந்தது.

ஒரு குறிப்பிட்ட விலங்கின் இறைச்சி என்று பெயிரிட்டு வேறு ஒரு விலங்கின் இறைச்சியை விற்பது சட்டப்படிக் குற்றமாகும்.

ஐரோப்பாவின் சில நாடுகளில் குதிரை இறைச்சியை உண்ணும் பழக்கம் இருந்தாலும், பிரிட்டனில் குதிரை இறைச்சியை உண்பது அரிதாகவே இருக்கிறது.

Related

உலகம் 8095940160590116447

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item