மைத்திரியால் முடியாவிட்டால் ரணில் பெறுப்பேற்க வேண்டும்: ஞானசார தேரர்
நாட்டில் பல தலைவர்கள் இருக்கின்றார்கள். மைத்திரியால் முடியாவிட்டால் நாட்டின் அதிகாரத்தை ரணில் பொறுப்பேற்க வேண்டுமென பொதுபலசேனா இயகத்தின் ச...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_115.html

நாடு பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகவும், எதிரி படைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த யாரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள பிரச்சினைகளை மாத்திரமே 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அமைந்த நாட்களில் பேசப்பட்டிருந்தது. எனினும் அபிவிருத்திகள் எதுவும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருணாகல் மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு ஊ சத்தமிட்டது நாட்டின் குடிமகன் என்ற ரீதியில் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் தலைவர் ஒருவருக்கு ஊ சத்தமிடும் நிலை சமூகத்தில் ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கே அதிகாரத்தை வழங்கினார்கள். சந்திரிகாவிற்கல்ல.
முன்னாள் ஜனாதிபதியை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகராக நியமித்தவர்களே இவ்வாறான நிலைக்கு பொறுப்பு கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.