கருணைகாட்டிய ஐ.எஸ்! உயிர்தப்பிய 200 யாஸிதி பிணைக்கைதிகள்
ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது பிடியிலிருந்து 200க்கும் மேற்பட்ட யாஸிதி மக்களை விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் சிஞ்சார்(Sin...

http://kandyskynews.blogspot.com/2015/04/200.html

ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது பிடியிலிருந்து 200க்கும் மேற்பட்ட யாஸிதி மக்களை விடுவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈராக்கின் சிஞ்சார்(Sinchar) மலைப்பகுதியில் வசிக்கும் சிறுபான்மையினமான யாஸிதி(Yazidi) இனமக்களை கடந்தாண்டு ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
கடத்தி செல்லப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்களை பாலியல் அடிமைகளாக்கினர். மேலும் மதம் மாற மறுத்த ஆண்களையும், சிறுவர்களையும் தலைத் துண்டித்து படுகொலை செய்தனர்.
தற்போது தாங்கள் பிடித்து வைத்திருந்த யாஸிதி பிணைக்கைதிகளில் 200க்கும் மேற்பட்டோரை ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக வடக்கு ஈராக்கில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் விடுவிக்கப்பட்டவர்களில் அனைவருமே முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களாய் இருப்பதாக கூறப்படுகிறது.
இதேபோல் கடந்த ஜனவரி மாதத்திலும் ஒரு தொகுதி யாஸிதி மக்களை ஐ.எஸ் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.