புருண்டியில் அதிபருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்
ஆப்ரிக்க நாடான புருண்டியின் தலைநகர் புஜம்புராவில் அதிபர் பியே நுஹுரின்சிஷாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன . அதிபருக்கு எதிரா...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_52.html
![]() |
| ஆப்ரிக்க நாடான புருண்டியின் தலைநகர் புஜம்புராவில் அதிபர் பியே நுஹுரின்சிஷாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. |
அதிபருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர் என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.
அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாகவே நடைபெற்றன எனவும் எமது செய்தியாளர் கூறுகிறார்.
கடந்த வாரம் அதிபருக்கு எதிரான இராணுவச் சதிப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
இதனிடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை ஒத்திவைக்கும்படி கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா புருண்டு அதிபரை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் அதிபராக மூன்றாவது முறையாக போட்டியிட நுஹுரின்சிஷா முனைந்துள்ளதை அடுத்து அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கடந்த மாதம் தொடங்கின.
இதையடுத்து அங்கு இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.



Sri Lanka Rupee Exchange Rate