ரமாடி நகரை மீட்க ஷியா ஆயுதக்குழுக்கள் களமிறங்கின
கடந்தவார இறுதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் பிடிக்குள் வீழ்ந்த இராக்கின் ரமாடி நகருக்கு அருகே உள்ள தளம் ஒன்றில், இராக்கிய அரசாங்காத்தின...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_70.html

கடந்தவார இறுதியில் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் பிடிக்குள் வீழ்ந்த இராக்கின் ரமாடி நகருக்கு அருகே உள்ள தளம் ஒன்றில், இராக்கிய அரசாங்காத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட, ஷியா ஆயுத துப்பாக்கிதாரிகள் வாகனத் தொடரணி ஒன்று வந்தடைந்துள்ளது.
ரமாடி நகரை மீட்டெடுப்பதற்கு, ஷியா ஆயுததாரிகளால் உதவ முடியும் என்று இராக்கிய அரசு நம்புகிறது. மேலும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கடந்த ஓராண்டுகாலத்தில் அடைந்த, மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக வர்ணிக்கப்படும் ரமாடி நகர் கைப்பற்றலை அவர்களிடமிருந்து மீட்டு, நிலைமையை தலைகீழாக்க முடியும் என்றும் இராக்கிய அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அண்மைய வாரங்களில், திக்ரித் நகரை மீளக் கைப்பற்றுவதில் ஈராக் படையினருக்கு உதவியாக ,ஷியா போராட்டக்காரர்கள் மிக முக்கிய பங்காற்றியிருந்தனர்.
ஆனால், சுன்னி முஸ்லிம்களை பெரும்பாண்மையாக கொண்டுள்ள ரமாடியில், ஷியா போராளிகளை கொண்டுபோய் சண்டைபோடுவது ஷியா சுன்னி குழுக்களுக்கிடையிலான இனவாத மோத்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்கிற அச்சம் காரணமாக, இராக், ஷியா போராளிகளின் உதவி கேட்டுச்செல்லத் தயங்கியதாக செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.


Sri Lanka Rupee Exchange Rate