ஆறாவது தேசிய வெற்றி விழா மாத்தறையில் ஆரம்பம்
6 ஆவது தேசிய வெற்றி விழா மாத்தறையில் இன்று முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம ,அதிதியாக கலந்து...


இந்த நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம ,அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
இது தொடர்பில் அறிந்து கொள்ள இராணுவப் பேச்சாளர் ஜயந்த ஜயவீரவுடன் தொடர்பினை ஏற்படுத்தினோம்.
ஆறாவது யுத்த வெற்றி விழா நிகழ்வுகள் இன்று (19) காலை மாத்தறை சமுத்ரா மாவத்தையில் இடம்பெறுகின்றது.
இது ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்றது ஜனாதிபதி காலை 8 மணிக்கு நிகழ்விற்கு வருகை தரவுள்ளார் 3250 இராணுவத்தினர் 615 கடற்படையினர் 916 வான்படையினர் இந்த நிகழ்வில் பஙற்கேற்கின்றனர்.
மொத்தமாக 5186 முப்படையினர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.975 பொலிஸ் உத்தியோகத்தர்களும் நிகழ்வுகளில், கலந்து கொள்கின்றனர். ஓய்வு பெற்ற யுத்த வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
இதேவேளை, இராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளதால் மாத்தறை நகரில் இன்று (19) விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.