யெமன் மீதான போர் – சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்….!!

யெமன் நாட்டின் 90 சதவீத பகுதிகளை ஷியா தீவிரவாதிகள் ஆக்கிரமித்த பிறகு யெமன் அதிபர் ஹாதி தம்முடைய நாட்டை மீட்டுத்தருமாறு சவூதி மன்...

sv

யெமன் நாட்டின் 90 சதவீத பகுதிகளை ஷியா தீவிரவாதிகள் ஆக்கிரமித்த பிறகு யெமன் அதிபர் ஹாதி தம்முடைய நாட்டை மீட்டுத்தருமாறு சவூதி மன்னர் சல்மான் அவர்களிடம் உதவி கோரினார்.
அதனை தொடர்ந்து உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் தலைமையில் முஸ்லிம் நாடுகள் ஏமனுக்கு படையெடுத்து ஷியா தீவிரவாதிகளை முற்றாக அழித்து நிர்மூலமாக்கியது.
சுமார் 20 நாட்களில் முஸ்லிம் நாடுகளின் அதிரடியான தாக்குதலில் ஷியா தீவிரவாத இயக்கம் முற்றிலுமாக நிலைகுலைந்தது.
அதனைதொடர்ந்து போரை நிறுத்திக்கொள்வோம் என்று யெமன் அதிபர் ஹாதி கூறியவுடன் முழு யெமன் நாட்டையும் அதிபர் ஹாதியிடம் ஒப்படைத்து சவூதி மற்றும் முஸ்லிம் நாடுகளின் படைகள் யெமன் விட்டு வெளியேறியது.
இதேப்போரில் அமெரிக்காவின் உதவியை யெமன் நாடியிருந்தால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் யெமனில் உள்ளே நுழைந்து போர் என்ற பெயரில் வருடக்கணக்கில் ஏமனில் உள்ள பொதுமக்களை கொன்று விட்டு…
அதன் மூலம் பல ஒப்பந்தங்களை போட்டு ஏமனில் உள்ள முழு இயற்கை வளங்களையும் முற்றாக சுரண்டி ஏமனை பிச்சைக்கார நாடாக ஆக்கி விட்டு அமெரிக்கா தனக்கான ராணுவத்தளங்களையும் அமைத்து அங்கே இன்னொரு ஆயுதம் ஏந்திய இயக்கம் உருவாகும் அளவுக்கு அராஜகம் புரிந்திருக்கும் அமெரிக்கா…
ஏனென்றால் ஆமை புகுந்த வீடும் அமெரிக்கா புகுந்த வீடும் வரலாறில் உறுப்பிட்டதாக சரித்திரமே இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களை அழிப்பதாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக காலம் கடத்துவது போல்….
ஈராக்கில் ISIS ஐ அழிப்பதாக வருடக்கணக்கில் காலம் கடத்துவது போல் இல்லாமல்…
யெமன் உள்ளே நுழைந்த இருபதே நாட்களில் ஷியா தீவிரவாதிகளை நிர்மூலமாக்கி விட்டு அந்த நாட்டை உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு கண்ணியமான முறையில் வெளியேறிய சவூதி அரேபியாவிடம் அமெரிக்கா பாடம் படிக்க வேண்டும்.
ஷியா தீவிரவாதிகளை அழித்தது மட்டுமின்றி மீண்டும் கட்டுமான பணிக்காக 274 மில்லியன் டாலர்களை வாரி வழங்கிய சவூதி அரேபியாவை போல் உலகின் எந்த நாடும் தனித்து விளங்க முடியாது என்பதை உலக வரலாற்றில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டியதாகும்

Related

தலைப்பு செய்தி 2873212112390254393

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item