நீதிமன்றத் தடையையும் மீறி கோத்தபாய ராஜபக்ச இரண்டாவது தடவையாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு நேற்றைய தினம் சென்ற வேளையில் அவருக்கு ஆதரவாக லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்து வழிநடத்தியவர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படும் என இன்று காலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்து மீறிலில் ஈடுபட்ட மஹிந்த ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்கள் பந்துல குணர்வதன, காமினி லொகுகே மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில மற்றும் இரவணா பலயவின் இத்தேகந்த சதாதிஸ்ஸ, பயங்கரவாதி ஞானசார உட்பட 27 பேருக்கு மே எட்டாம் திகதி ஆஜராகும்படி கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் 13 பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் மேலும் ஒன்பது பௌத்த துறவிகளும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.