இனவாதத்தை மீண்டும் ஏற்படுத்த முயற்சிக்கும் பைத்தியங்கள்!
சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட, சிறிலங்காவின் கொடியை பயன்படுத்தியமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_108.html
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீண்டும் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எதிர்பார்க்கும் பைத்தியம் பிடித்த தரப்பினராகவே இருக்கலாம் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
30 வருடக்கால யுத்தத்தின் பின்னர் எமது நாட்டில் மூவின மக்களும் சுதந்திரமாக வாழ்ந்திடும் இத்தருணத்தில் மீண்டும் சில இனவாத சக்திகளை பயன்படுத்தி மீண்டும் இனவாத செயற்பாடுகளை மேற்கொள்ள எந்த ஒரு தரப்பினரையும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு சர்ச்சைக்குரிய தேசியக் கொடியை பயன்படுத்திய நபர்களுக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை சிறுபான்மையினரை அடையாளப் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்கா கொடியை பயன்படுத்தியமைக்காக, பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மன்னிப்பு கோரியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச, லஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டமைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது இந்தக்கொடியை அழகப்பெருமவும் ஏந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.