மஹிந்த என்ன துட்டகைமுனு மன்னனா? சிங்களவர்கள் முட்டாள்களா?

2005ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தன்னை தோற்கடிக்க மஹிந்த சூழ்ச்சி செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்...


2005ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, தன்னை தோற்கடிக்க மஹிந்த சூழ்ச்சி செய்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.

சிறிலங்காவை பிளவுபடுத்த முயற்சிப்பதாக தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

அவ்வாறு நாட்டை பிளவுபடுத்த நினைத்திருந்தால் ஆட்சி அதிகாரத்தை தாம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு வழங்கியிருக்க முடியும்.

மன்னர் துட்டகைமுனுவை லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்றதனைப் போன்றே சிலர் சத்தமிட்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் அரசாட்சி செய்வது நீதியோகும் என்பதனை சிலர் மறந்து விட்டு செயற்படுகின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வாக்கு மூலமொன்றை அளிக்குமாறு கோரி லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

முன்னாள் ஜனாதிபதிக்கு ஏன் வந்து வாக்கு மூலமொன்றை அளித்திருக்க முடியாது.?

அரசாங்கம் 100 நாள் திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி சொந்த சொத்து என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. கட்சி தோல்வியடைந்த போது அதனை காத்து வந்ததாகவும், பலர் இணைந்தே தீர்மானங்கள் எடுத்தனர் எனவும் ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற நேர்காணலில் ரணில் இந்த தகவல்களை தெரிவித்தார்.

Related

தலைப்பு செய்தி 3620759719116501186

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item