மங்களவை ஓரம்கட்ட மிலிந்த மொரகொட ஊடாக சூழ்ச்சி
இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை ஓரங்கட்ட தனியார் நிறுவனத்தின் தலைவர் ஒருவர் முன்நின்று செயற்படுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெள...


இதற்காக நிதி அமைச்சிற்கு பொறுப்பாளராக இருக்கும் ஆர்.பாஸ்கரலிங்கத்தை மிலிந்த மொரகொடவை தொலைப்பேசியில் அழைத்து முன்னாள் பிரதமரின் செயலாளர் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் ஓர் கலந்துரையாடலை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலின் மூலம் சீன நிறுவனத்தின் திட்டத்தை மீள் செயல்படுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் இந்த விவகாரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போர்ட் சிட்டி நிறுவனத்திடம் இருந்து இந்த தனியார் ஊடக நிறுவனம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஊடக தலைவர் மற்றும் மிலிந்தவின் விருப்பு வெருப்புகளுக்கு அமைய முன்னாள் அரச உயர் அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திக்கும் திட்டத்திற்கு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவை ஜனாதிபதிக்கு மிக நெருக்கமாக வைத்துள்ளார்.
இதன் மூலம் அமைச்சர் மங்கள சமரவீரவை அரசியலில் இருந்து அழிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதற்கு இந்த ஊடக தலைவர் செயல்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.