அமைச்சர் ரிஷாதின் அரசியலை சூன்யப்படுத்துவதற்கு இன்னொரு சதி!
வில்பத்து பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்கள் வாக்களிப்பை தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிய வருகிறது. பல்வேறு ப...

விலபத்துவின் மரிச்சிக்கட்டி உட்படலான சில பகுதிகளில் சட்ட ரீதியாக வாழும் உரிமை பெற்றுள் முஸ்லிம்களை மானசீக ரீதியாகப் பலவீனப்படுத்துவதன் மூலம் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கே இந்தச் சதிமுயற்சி முன்னெடுக்கப்படுகிறது.
தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள இனவாதிகளும் பௌத்த தேரர்களும் அடிக்கடி அந்தப் பிரதேதசங்களுக்குச் சென்று அங்குள்ள முஸ்லிம்களைப் பார்வையிடுவதும் ஏளனமாக, கேவலமாக அவர்களை நோக்குவதுமான தொந்தரவுவுமிக்க செயற்பாடுகளின் ஊடாக அந்த மக்கள் அங்கிருந்து சுயமாக வெளியேறும் நிலை உருவாகலாம். அதன் மூலம் அவர்கள் தங்களது வாக்குரிமையை அவர்கள் இழக்கவோ அல்லது வாக்களிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளவோ கூடியதான கட்டாயத்துக்கு தள்ளப்படலாம்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் எதிர்கால அரசியைலை மௌனிக்கச் செய்ய மேற்கொள்ளுப்படும் இந்த முயற்சிகள் தொடர்பில் அந்தப் பிரதேச முஸ்லிம் மக்கள் கவனமாகச் செயற்படுவது அவசியம்.
வில்பத்து பிரதேசத்தில் சட்ட ரீதியாக வாழும் மக்களுக்கு வாக்குரிமை உள்ளது. அவ்வாறானவர்கள் 2015 ஆம் ஆண் தேர்தல் பெயர் இடாப்பின்படி வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கும் தகுதி கொண்டவர்கள் என தெரிவித்துள்ளார்.