மைத்திரி தற்போது பயன்படுத்தும் வாகனத்தின் இலக்கத்தை ஏற்கனவே பயன்படுத்திய மகிந்த மகன்
கெஸ்பேவயில் கடந்த ஜனவரி மாதம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஓட்ட பந்தய கார் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_852.html
அது தொடர்பிலான விசாரணைகளை இடைநிறுத்துவதற்கு பல்வேறு தரப்பினர் முயன்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பந்தய காரை முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் இளைய மகன் பயன்படுத்தி வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனத்தை சுற்றுவட்டத்தில் இடம்பெற்ற விபத்துடன் இந்த காரை பயன்படுத்தியவர்களுக்கு தொடர்பு இருந்த போதிலும் இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் குறித்த காரின் இலக்கத்தகடுகளில் காணப்பட்ட இலக்கங்கள் போலியானவை எனவும் தெரியவந்துள்ளதுடன்,
இந்த இலக்கதகடுகளில் காணப்பட்ட இலக்கங்கள் உள்ள பென்ஸ் ரக காரை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தி வருகின்றார் என ஜனாதிபதி செயலகம் உறுதி செய்துள்ளது.
நிசான் ஜிடிஆர் ரக வாகனத்தின் இலங்கை பெறுமதி 60 மில்லியனிற்கும் அதிகம் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
தற்போது குறிப்பிட்ட வாகனம் கெஸ்பேவ நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றம் குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை கோரியுள்ளது.
எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் இதுவரை எந்தவொரு பதிலும் வழங்காமல் அசமந்த போக்கில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதியின் வாகனத்திற்கு பயன்படுத்தப்படும் இலக்கத்தகட்டு இலக்கத்தினை கொண்ட வாகனம் தன்னுடையது என நபரொருவர் உரிமை கோரியுள்ளார்.
இந்நபர் இலங்கையின் பிரபல்யம் வாய்ந்த வாகன உதிரிப்பாக இறக்குமதியாளர் என தெரிவிக்கப்படுகின்றது.
அதுமாத்திரமல்லாது ஜனாதிபதியின் வாகனத்தகட்டு இலக்கம் எவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் மகனால் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் காணப்பட்டது என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.