8 குழந்தைகளை கொலை செய்த தாய்க்கு 9 வருட சிறைத்தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொலை செய்த பெண்ணொருவருக்கு 9 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 51 வயதான Dominique Cottrez என்ற பெண்ணுக்கே சி...

தனக்கு பிறந்த 8 குழந்தைகளை கொலை செய்த பெண்ணொருவருக்கு 9 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
51 வயதான Dominique Cottrez என்ற பெண்ணுக்கே சிறைத்தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளிதுள்ளது.
Dominique Cottrez , 1989 - 2000 ஆண்டு காலப்பகுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளின் எல்லைக் கிராமங்களில் அவரின் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
1989ம் ஆண்டு முதன்முறையாக தாய்மை அடைந்த Dominique Cottrez, குளியறையில் குழந்தையை பிரசவித்துள்ளார். இதன்பின்னர் அந்தக் குழந்தையை கொலை செய்து தோட்டத்தில் புதைத்துள்ளார். இதன் பின்னர் பிறந்த மற்றைய ஏழு குழந்தைகளையும் இவ்வாறு கொலை செய்து தோட்டத்தில் புதைத்துள்ளார்.
2010ம் ஆண்டு Dominique Cottrez வசித்து வந்த வீட்டுக்கு புதிய வந்தவர்களால் இந்த படுகொலை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன. இதனைத்தொடர்ந்து Cottrez காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது, வடக்கு பிரான்ஸின் Villers-au-Tertre பகுதியிலுள்ள தோட்டத்தில் முதலில் இரு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் ஆறு குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த கொலைச்சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, Dominique Cottrez அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார்.