பசில் ராஜபக்ஸ சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மூவரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_672.html

முன்னாள் அமைச்சருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க ஆகியோரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார தெரிவித்தார்.
அவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
பொலிஸ் பாரிய நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (22) மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவரும் நேற்றிரவு கடுவளை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate