நல்லாட்சியை ஏற்படுத்துவது சவால் மிக்க விடயமேயாகும் – சரத்பொன்சேகா
நல்லாட்சியை ஏற்படுத்துவது சவால் மிக்க விடயமாகும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நல்லாட்சியை ஏற்பட...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_964.html

நல்லாட்சியை ஏற்படுத்துவது சவால் மிக்க விடயமாகும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சவால் நிறைந்ததேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் நான் நன்கு அறிவேன் எனவும் அவர்கள் நம்பகத் தகுந்த தலைவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்னதாக மோசடிகளில் ஈடுபட்டவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார். அரசியல்வாதிகளை விடவும் நாட்டுக்கு மக்களே முக்கியமானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.