கதிர்வீச்சுத் தன்மையுடன் ஜப்பான் பிரதமர் அலுவலகக் கூரையில் இறங்கிய மர்ம டிரோன்!
ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேயின் அலுவலகக் கூரை மீது சிறிய ரக மர்ம ஆளில்லா டிரோன் விமானமானம் ஒன்று தரையிறங்கி உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_478.html
ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபேயின் அலுவலகக் கூரை மீது சிறிய ரக மர்ம ஆளில்லா டிரோன் விமானமானம் ஒன்று தரையிறங்கி உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மர்ம டிரோனில் கதிர்வீச்சு அபாயம் உடைய சிறியளவிலான பதார்த்தங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 50 செண்டி மீட்டர் அகலமும் 4 விசிறிகளும் உடைய இந்த ஆளில்லா மினி டிரோன் வந்திறங்கியதை பிரதமரது ஊழியர்களது ஒருவர் முதலில் அவதானித்து உடனடியாக அனைவரையும் எச்சரிக்கை செய்துள்ளார். குறித்த மினி டிரோனில் ஓர் சிறிய கமெரா பொருத்தப் பட்டிருந்ததாகவும் அதில் இருந்து பிளாஸ்டிக் போத்தல் ஒன்றில் கதிர்வீச்சு அபாயமுடைய பதார்த்தம் இருந்ததாக போலிசார் தெரிவித்துள்ளனர். இதில் அடங்கியிருந்த கதிர் வீச்சுப் பொருள் சீசியம் என்ற மென்மையான மெட்டல் என்றும் ஆனால் இது மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது அல்ல என்றும் கூட அறிவிக்கப் படுட்டுள்ளது.
இச்சம்பவம் நடந்த போது ஜப்பான் பிரதமர் அபே இந்தோனேசியா இந்தோனேசியாவில் ஆசிய ஆப்பிரிகக் மாநாட்டில் பங்கு பெற சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.