சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சி ஆரம்பம்: ரஞ்சித் டி.சொய்சா ஆரூடம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கிய நடவடிக்கைக்கு எதிராக எதிர்காலத...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_557.html
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கிய நடவடிக்கைக்கு எதிராக எதிர்காலத்தில் பாரிய பதில் தாக்குதலை நடத்த போவதாக அந்த கட்சியின் இறக்குவானை தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
கட்சியில் அனுபவங்களை கொண்ட சிரேஷ்ட உறுப்பினர்களை நீக்கி விட்டு, ஆமாம் சாமிகளை மத்திய செயற்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்க கட்சியின் தலைவர் எடுத்த தீர்மானத்தை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.
இப்படியான கீழ்த்தரமான நடவடிக்கைகளினால், எமது முன்னோக்கிய பயணத்தை தடுத்து விட முடியாது.
உள்ளூராட்சி மட்டத்தில் இருந்து நாடாளுமன்ற வரை வந்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த பந்துல குணவர்தன, சாலிந்த திஸாநாயக்க, டி.பி.ஏக்கநாயக்க, எஸ்.எம். சந்திரசேன ஆகியோரை மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கி விட்டு, அரசியலில் அனுபவங்கள் குறைந்த ஹிருணிகா, சோலங்க ஆராச்சி போன்றவர்களை நியமித்தது கேலிக்குரியது.
இப்படியான செயற்பாடுகள் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மண் பிட்டு செய்யும் விளையாட்டு வீடாக மாறிவிட்டது.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரிய வீழ்ச்சியின் ஆரம்பம் எனவும் ரஞ்சித் டி சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.