ரணில் இம்முறை மஹிந்தவுடன் மோத வேண்டியுள்ளது!– பவித்ரா

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மோத வேண்டியிருப்பதாக முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெ...

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்முறை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மோத வேண்டியிருப்பதாக முன்னாள் அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவிற்கு அஞ்சியே ரணில் போட்டியிடவில்லை.

இம்முறை ரணில் மஹிந்தவுடன் போட்டிபோட வேண்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவோம் என புரிந்து கொண்ட ரணில் பின்வாங்கினாலும் இம்முறை மஹிந்தவை எதிர்நோக்கியே ஆக வேண்டும். அல்லது இம்முறையும் வேறும் வேட்பாளர் ஒருவரை தேட வேண்டியேற்படும்.

நல்லாட்சி என்ற போர்வையில் ரணில் விக்ரமசிங்க தரப்பினர் பாரியளவு அடக்குமுறைகளை மேற்கொள்கின்றனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் வென்றெடுக்கப்படும். ஆதரவளிக்கும் அனைவரிடமும் இன்னமும் கையொப்பங்கள் திரட்டப்படவில்லை.

திட்டமிட்ட வகையில் சில காலம் அரசாங்கத்திற்குள் இருந்து செயற்பட்டோம்.

தற்போது வெளியேறி போராடுகின்றோம், பவித்ராதேவி வன்னியாரச்சி சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 8831436934701474289

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item