யானையின் கழிவில் தயாராகும் விலையுயர்ந்த பிளாக் ஐவரி கோப்பி (Photos)
வெளிநாட்டுப் பயணிகளைக் கவர தாய்லாந்து ஹோட்டல்களில் பிளாக் ஐவரி கோப்பி (Black Ivory Coffee) வழங்கப்படுகிறது. இந்த பிளாக் ஐவரி கோப்பி, ஒரு க...
http://kandyskynews.blogspot.com/2015/06/photos.html
வெளிநாட்டுப் பயணிகளைக் கவர தாய்லாந்து ஹோட்டல்களில் பிளாக் ஐவரி கோப்பி (Black Ivory Coffee) வழங்கப்படுகிறது.
இந்த பிளாக் ஐவரி கோப்பி, ஒரு கோப்பை 50 அமெரிக்க டொலர் என விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ அளவில் வாங்க வேண்டும் என்றால், 1100 அமெரிக்க டொலர்களை நீங்கள் செலவிட வேண்டும்.
இந்த கோப்பியின் தயாரிப்பு முறை மிக விநோதமானது.
தாய்லாந்தில் யானைகளை வாங்கி வளர்த்து அவற்றுக்கு அன்றாட உணவில் வாழைப்பழம், அரிசிச் சோறுடன் கோப்பி பழங்களையும் சேர்த்து அளிக்கின்றனர்.
யானைகளின் வயிற்றில் செரிமானம் ஆகி வெளியெறும் கழிவில் கலந்து வரும் கோப்பி கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூடான கோப்பி இதுவாகும்.
இந்த பிளாக் ஐவரி கோப்பியை தாய்லாந்து கோல்டன் டிரையாங்கில் நிறுவனம் தயாரிக்கிறது.
கனடாவைச் சேர்ந்த இதன் நிறுவனர் பிளேக் டின்கின் கூறியதாவது,
மக்களுக்கு வித்தியாசமான தரமிக்க, அதேசமயம் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் கோப்பியை தயாரிக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாகப் போராடி வந்தேன். முதலில் பூனை இடும் கழிவுகளிலிருந்து கோப்பியை தயார் செய்து குடித்தபோது அதன் சுவை திருப்தி அளிக்கவில்லை. பின்னர், சிங்கம், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளின் கழிவுகளிலிருந்தும் கோப்பியை தயாரித்தோம். ஆனால், அது நாங்கள் எதிர்ப்பார்த்த சுவையுடன் இல்லை என்பதால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டோம். பின்னர், யானைகள் இடும் கழிவிலிருந்து கோப்பி கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்தி அதன் மூலம் கோப்பி தயாரித்தபோது அதன் சுவை மிகவும் பிடித்துப்போனது. அதாவது யானைகள் பழங்கள், காய்கறிகள், மூலிகைகள், அரிசி வகைகள் மற்றும் கோப்பி கொட்டைகளை அன்றாடம் உண்டு வருகிறது. இவை அனைத்தும் யானையின் வயிற்றிற்குள் சென்று செரிமானம் ஆகிறது.
பிறவகை உணவுகளுடன் இணைந்து குடல் வழியாக செல்வதால், கோப்பி கொட்டைகளுக்கு கூடுதல் சுவை கிடைக்கிறது. மேலும், வயிற்றில் உற்பத்தியாகும் செரிமான திரவம் கோப்பி கொட்டையில் உள்ள கசப்பு தன்மையை முழுவதுமாக நீக்கி விடுகிறது. யானையின் வயிற்றிற்குள் சுமார் 17 மணி நேரம் நிகழும் இந்த செரிமான முறைக்கு பின்னர், அந்த உணவு கழிவாக வெளியேறுகிறது. இந்தக் கழிவை சேகரித்து அவற்றிலிருந்து கொட்டைகளை மட்டும் தனியாகப் பிரிப்பதற்கு என ஒரு குழு உள்ளது. அவர்கள் அவற்றை தனியாக பிரித்து வெயிலில் போட்டு உலர்த்தி தரமான கோப்பிக்கு தயார் படுத்துவார்கள்.
பின்னர், 19ம் நூற்றாண்டின் பயன்படுத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டு கோப்பி இயந்திரத்தின் உதவியுடன் பிளாக் ஐவரி கோப்பி தயாரிக்கப்படுகிறது. இந்த ஓட்டலுக்கு வரும் பெரும்பாலான மக்களின் முதல் தெரிவாக இந்த கோப்பி அமைந்துள்ளது,
என்றார்.