உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்: பின் தள்ளப்பட்டார் தோனி
2015ஆம் ஆண்டிற்கான, உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை (Forbes) வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_208.html
2015ஆம் ஆண்டிற்கான, உலகின் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் சஞ்சிகை (Forbes) வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் Floyd Mayweather உள்ளார். இவரது சொத்து மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இரண்டாவது இடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் Pacquiao உள்ளார்.
இவரது சொத்து மதிப்பு 160 மில்லியன் டொலர்கள் ஆகும்.
போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) 3 ஆவது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 79.6 மில்லியன் டொலர்கள் ஆகும்.
லயோனல் மெஸி 4 ஆவது இடத்திலும், ரொஜர் பெடரர் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
இதேவேளை, டைகர் உட் 9 ஆவது இடத்திலும் Rafael Nadal 22 ஆவது இடத்திலும் உள்ளனர்.
மரியா ஷரபோவா 26 ஆவது இடத்தில் உள்ளார்.
100 பேரை உள்ளடக்கிய இப்பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி 23 ஆவது இடத்தில் உள்ளார்.
கடந்த வருடம் 22 ஆவது இடத்திலிருந்த தோனி, இந்த முறை 23 ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அவரது மொத்த சொத்து மதிப்பு 31 மில்லியன் அமெரிக்க டொலராகும்.