ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கு அஞ்சுகின்றன!– சபாநாயகர் கேலி
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் தேர்தலுக்கு அஞ்சுவதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றில் கிண்டல் செய்துள்ளார். எனக்குத் தெரிந...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_650.html
எனக்குத் தெரிந்த வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரண்டு தரப்புமே அஞ்சுகின்றன.
முடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல்களுக்கு அஞ்சுவதில்லை என்றார்.
20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல அவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஆம் என பதிலளித்து, நாடாளுமன்றைக் கலைக்குமாறு கோரியிருந்தன.
எனினும், 20ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என லக்ஸ்மன் கிரியல்ல அவையில் குறிப்பிட்டார்.
இந்த வாதப் பிரதிவாதங்களை அவதானித்த சபாநாயகர் சமால் ராஜபக்ச, இரண்டு தரப்புமே பொதுத்தேர்தல் ஒன்றுக்கு செல்ல அஞ்சுவதாகவே தென்படுகின்றது என தெரிவித்தார்.