சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தேவையான வகையில் அரசாங்கம் அமைக்க இடமளிக்கப்படாது!– பிரதமர்
மக்கள் ஆணையற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு தேவiயான வகையில் ஆட்சியை அமைக்க இடமளிக்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_382.html
மக்களிடமே அதிகாரம் காணப்படுகின்றது, அந்த அதிகாரத்தை உதாசீனம் செய்து அரசாங்கமொன்றை அமைக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முயற்சித்தால் அது மக்களுக்கு இழைக்கும் துரோகமாக கருதப்பட வேண்டும்.
ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தார்.
அன்று மஹிந்தவிற்கு ஆதரவளிக்க நியமிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றின் மக்கள் ஆணையும் இல்லாமல் போயுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கப் பெற்ற மக்கள் ஆணையின் அடிப்படையில் எனக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.
எனினும்ää இன்னமும் தமக்கு மக்கள் ஆணை இருப்பதாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பிரச்சாரம் செய்கின்றது.
மக்கள் ஆணையை மாற்றுவதனால் மக்கள் முன்னிலையில் மீண்டும் செல்ல வேண்டும்.
பிரதமர் ஒருவரை நியமித்து ஆட்சியை மாற்ற வேண்டுமென கருதினால் அது மக்களுக்கு இழைக்கும் துரோகமாகும்.
20ம் திருத்தச் சட்டத்தை கோரினார்கள், அதனை வழங்கிய போது வேண்டாம் என்கின்றார்கள்.
எனவே நாம் தேர்தல் ஒன்றுக்கு செல்வோம், தேர்தலின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.