சீனாவை மிரட்டும் அதிவேக புயல்: 8 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்
சீனாவை புரட்டிப்போட்டு வரும் அதிவேக புயல் இன்று பிற்பகல் கரையை கடப்பதால், 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்ட...


சீனாவை புரட்டிப்போட்டு வரும் அதிவேக புயல் இன்று பிற்பகல் கரையை கடப்பதால், 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம், மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
சான்-ஹொம் என்று பெயரிடப்பட்ட சக்தி வாய்ந்த புயல், இன்று பிற்பகல் கடற்கரை பகுதியான ருயி ஆன் மற்றும் சூசான் பகுதியில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காற்று 200 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலில் நிறுத்தப்பட்டிருந்த 28,764 கப்பல்கள் துறைமுகங்களில் பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை வரை இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக புயல் கரையை கடக்கும் நேரத்தில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் ஜேஜியாங் மாகாணத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருந்த 388 வி்மானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அசாம்பாவிதங்களை தவிர்க்க மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.