பாவாடைகளின் கீழ் ஒளிப்பதிவு!!!
நேற்று 50களின் வயதுடைய காமுகன் ஒருவர் காவற்துறையினரிடம் சிக்கியுள்ளார் அல்சால்சிலுள்ள Illkirch நகரிலுள்ள Auchan இல் பொருட்க...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_657.html
நேற்று 50களின் வயதுடைய காமுகன் ஒருவர் காவற்துறையினரிடம் சிக்கியுள்ளார் அல்சால்சிலுள்ள Illkirch நகரிலுள்ள Auchan இல் பொருட்களைக் கொள்வனவு செய்வது போல் அடிக்கடி குனிந்தபடி இருந்துள்ளார். அதே நேரம் கையில் தனது செல்பேசியையும் வைத்திருந்துள்ளார். இவரின் நடவடிக்கையைச் சந்தேகித்த ஒரு பெண் இவரை அவதானித்தபோது, இவர் அங்கு செல்லும் பெண்களின் பாவாடைக்குக் கீழால் செல்பேசியில் ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்துள்ளார். உடனடியாக இந்தப் பெண் பெரிதாக அலறிச் சத்தமிட்டுள்ளார். இந்த நபர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
ஆனாலும் பெண்ணின் அலறல் கேட்டு அங்கு வந்த பாதுகாப்பு அதிகாரிகள், இந்த நபரை மடக்கி உள்ளனர். காவற்துறையினர் அழைக்கப்பட்டு அவர்களிடம் இந்தக் காமுகன் ஒப்படைக்கபட்டார்.
இதுவரை எந்தக் குற்றப்பதிவுகளிலும் இல்லாத இந்த நபர், காவற்துறையினரால் விசாரிக்கப்பட்டபோது தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். இவரது செல்பேசியில் இதேபோன்ற பல ஒளிப்பதிவுகள் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணை நடந்த சமயத்தில் இவர் நிறை மதுபோதையில் இருந்துள்ளார்.
விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் மீது நீதிமன்ற விசாரணை நடாத்தப்படும்