தம்புள்ளையில் போலி வைத்தியர் கைது
தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் வைத்தியரை போன்று நுழைந்த நபர் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து வைத்த...


சந்தேகநபரிடமிருந்து வைத்தியருக்கான போலி அடையாள அட்டை மற்றும் வைத்திய உபகரணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் சாதாரண உடையுடன் சத்திர சிகிச்சை அறைக்குள் செல்ல முற்பட்ட போது, அங்கிருந்த வைத்தியர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மெதிகிரிய பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



