புத்தளம் மற்றும் பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்
பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் புத்தளம் – சின்னப்பாடு பகுதியில் வீடொன்று சேதமடைந்துள்ளது. நேற்று முத...


நேற்று முதல் பெய்து வரும் மழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் , தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடரும் மழை காரணமாக மன்னார் புத்தளம் பிரதான வீதியூடான போக்குவரத்து எழுவான்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.