ஜனாதிபதி தலைமையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்தின் உத்தியோகப்பூர்வ நிகழ்வு
தேசிய எரிசக்தி பாதுகாப்பு மாதத்தின் உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் இன்று நடைபெற்றது...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_87.html

எதிர்காலத்திற்காக நாடு என்ற தொனிப்பொளின் கீழ் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டி செயல்முறைத் திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும்.
சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அதிதிகள், இராணுவ வீரர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் கண்காட்சி போட்டியொன்றிலும் பங்கேற்றனர்.
அத்துடன் கூப்பன்களுடனான 5 ஆயிரம் பலூன்களும் பறக்கவிடப்பட்டுள்ளன.
இந்த கூப்பனை பெற்றுக்கொள்பவர்களின் வீடுகளுக்கு, குறைந்த மின்வலு கொண்ட மின்குமிழ்களை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அத்துடன், எரிசக்தியை மீதப்படுத்தும் சாரதிகள், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்கள் பாராட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.