பெளத்த தேரர்கள் விகாரைகளில் தேர்தல் அலுவலகங்களை அமைக்க அனுமதி !!!!
சஹீத் அஹமட் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டிடும் பெளத்த தேரர்கள் அவர்களின்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_52.html
சஹீத் அஹமட் : எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டிடும் பெளத்த தேரர்கள் அவர்களின் விகாரைகளில் தேர்தல் அலுவலகங்களை அமைக்க தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அனுமதி வழங்கியுள்ளார்.பொது பெர முனை என்ற பொது பல சேனாவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விதாரந்தனிய நந்தன தேரர் பெளத்த விகாரையில் தேர்தல் அலுவலகத்தை அமைக்க கோரியதை அடுத்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இந்த அனுமதியை வழங்கியுள்ளார் என அரசாங்க ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றதுசிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான பல வன்முறைக்கு காரணமான அமைப்பாக குற்றசாட்டுக்களை எதிர்கொள்ளும் கடும்போக்குவாத பெளத்த அமைப்பான பொது பல சேனாவின் வேட்பாளர் தேரர் விதாரந்தனிய நந்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி மதத் வழிபாட்டுத் தலங்களில் அரசியல் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே தான் வித்துள்ள தடையை தானே மீறுவதாக இந்த புதிய அனுமதி அமைத்துள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate