நாகபாம்புக்கு தேர்தல் ஆணையாளரின் இறுதி எச்சரிக்கையா ??

தேர்தல் பிரச்சாரத்தின் பொது சில அர­சியல் கட்­சிகள் மதத் தையும், இனங்­க­ளையும் அவமதிக்கும் வகையில் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்த...

thesapriya

தேர்தல் பிரச்சாரத்தின் பொது சில அர­சியல் கட்­சிகள் மதத் தையும், இனங்­க­ளையும் அவமதிக்கும் வகையில் பிர­சார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக தனக்கு முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக தெரி­வித்துள்ள தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்பிரிய இதன்­பின்பு அவ்­வா­றான முறைப்­பா­டுகள் கிடைத்தால் சம்­பந்­தப்­பட்ட கட்­சி­யையும்,அதன் வேட்பாளர்களையும் தடை­செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்பதாகக் எச்சரிக்கை விதுள்ளதாக அறிய முடிகிறது

அர­சியல் கட்­சி­களின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணை­யா­ள­ருக்­கு­மி­டையில் கலந்துரையா­ட­லொன்று நேற்று இடம்­பெற்­றபோதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்

எந்­த­வொரு அர­சியல் கட்­சியோ, அபேட்­ச­கரோ எந்­த­ மதத்­தையோ இனத்தையோ அவ­ம­தித்து தேர்தல் பிர­சாரம் செய்­வது கண்­டிக்­கத்­தக்­க­தாகும் எனவும் .வேட்பாளர்கள் தமிழர், முஸ்லிம், சிங்­க­ளவர் என வேறு­ப­டுத்த முடி­யாது. தேர்தல் மீறினால் அதற்­கு­ரிய சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நாகபாம்பை அதன் சின்னமாக கொண்ட பொது­ஜன பெர­முன எனற பொதுபல­சே­னாவின் அர­சியல் கட்சியின் அனுராதபுர வேட்பாளர் ஒருவர் அல்­குர்­ஆ­னையும், முஸ்லிம்களையும் அவ­ம­திக்கும் வகையில் கருத்­துக்கள் தெரி­வித்து வரு­வ­தாக ஆர்.ஆர்.டி.அமைப்பின் உறுப்­பி­னர்கள் தேர்தல் ஆணையாள­ரி­டமும், பொலிஸ்மா அதி­ப­ரி­டமும் முறைப்­பாடு செய்­தி­ருந்­தமை குறிப்பி­டத்­தக்­கது.

Related

இலங்கை 1676652476193479969

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item