ராடா நிறுவனத்தின் பணிப்பாளர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
Angoda Hospital ராடா நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றிய கலாநிதி ஜயந்த சமரசிங்க அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் அனும...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_25.html
Angoda Hospital
ராடா நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாக பணிப்பாளராக பணியாற்றிய கலாநிதி ஜயந்த சமரசிங்க அங்கொட மனநோயாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அனில் டி சில்வா கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
ராடா நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல், மோசடி தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ராடா நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் சம்பந்தமாக பொறுப்புக் கூறவேண்டிய நபர்கள் வெளியில் இருக்கும் போது, அவர்களை கைது செய்யாது ஜயந்த சமரசிங்கவை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதால், ஏற்பட்ட உளநல பாதிப்புக் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
ஜயந்த சமரசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு சட்டதரணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், அவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
ராடா நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை கைது செய்ய, குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் டிரான் அலஸ் உயர்நீதிமன்றத்தில் பெற்றுள்ள தடையுத்தரவு காரணமாக அவரை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
ராடா நிறுவனத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கோடிக்கணக்கான ரூபா பணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுனாமி அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்து கொடுப்பதற்காக இந்த நிதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.