இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை இன்று திறப்பு !
இலங்கையின் முதலாவது திறந்தவெளி மிருகக்காட்சிசாலை பின்னவலையில் இன்று (17) திறந்துவைக்கப்படவுள்ளது. நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத...

நாட்டின் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலை திறந்துவைக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யானைகள் சரணாலயத்திற்கு அண்மித்து அமைந்துள்ள 44 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த திறந்தவெளி மிருகக்காட்சிசாலையில், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், முதலைகள் உட்பட பல விலங்குகளை கண்டு ரசிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விலங்கினங்களின் அன்றாட நடவடிக்கைகளையும் உல்லாசப் பிரயாணிகள் அவதானிக்க முடியும்.