ஷிரந்தி ராஜபக்ஷ விரைவில் கைது செய்யப்படுவாரா?
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியை, விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதிமோசடி தவிர்ப்புப் பிரிவு அழைப்பு விடுத்த...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_943.html
![]() |
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியை, விசாரணைக்கு வருமாறு பொலிஸ் நிதிமோசடி தவிர்ப்புப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று நிதிமோசடி தவிர்ப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஷிரந்த ராஜபக்ஷவினால் செயற்படுத்தப்பட்டு வந்த சிறிலிய சவிய என்ற அமைப்பில் பாரிய நிதி மோசடி ஏற்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமது தாயை விசாரணைக்கு வருமாறு அழைப்பு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம், சித்திரவதைகளில் ஈடுபடுவது இதிலிருந்து தெரியவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் தந்தையான மஹிந்த ராஜபக்சவும் அரசியலில் ஈடுபட்ட போதும் தாயும், சகோதரர்களும் அதிலிருந்து விலகியிருந்தனர்.
எனவே அவர்களை பிரச்சினைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று நாமல் கோரியுள்ளார்.
இதேவேளை, பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டே உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|