ஜனாதிபதி மைத்திரி என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது ரணில்: விமல் குற்றச்சாட்டு

நாட்டில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்...

நாட்டில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் இருப்பவர்கள் ஊ… சத்தமிடுவதனால் சில அரசியல்வாதிகளின் பெயர்களை இன்று அரசியல் கூட்டங்களின் போது கூறமுடியாமல் உள்ளது. அதனால் நான் சில பெயர்களை குறிப்பிடுவதில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில்.
வடக்கில் பொலிஸ் பிரிவை மாற்றுவதும், தெற்கில் நிதி குற்றப்புலனாய்வு பிரிவை நியமித்துக் கொண்டு அவர்களுக்கு எதிரானவர்களை வேட்டையாடிக் கொண்டு வருகிறார்கள், எனினும் பிரதமர் செய்வது குறித்து ஜனாதிபதிக்கு தெரியாது.
செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் இடம்பெறுவது உறுதி.


நான் இதனை அரசியல் சோதிடத்திற்கமையவே கூறினேன்.
சோதிடர்களிடம் கேட்டு இதனை நான் கூறவில்லை.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கை தொடர்பான இறுதி அறிக்கை செப்டெம்பர் மாதம் வழங்கப்படும்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட 43 இராணுவத்தினரின் பெயர் குறித்த அறிக்கையில் காணப்படுகின்றன.
யுத்த இறுதிகட்டத்தின் கடைசி 5 நாட்கள் குறித்து மாத்திரமே ஜெனீவா அறிக்கையில் உள்ளன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறித்து 5 நாட்களும் சீனாவில் தான் இருந்துள்ளார்.
செப்டெம்பர் மாதம் தேர்தல் இடம்பெற்றால் மகிந்தவிற்காக வருகின்ற மக்கள் கூட்டம் இதனைவிட அதிகமாக காணப்படும்.
எனவே அதற்கு முன்னர் எப்படியாவது தேர்தலை வைத்துவிடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்
- See more at: http://tamilseithy.net/45849#sthash.6J94EgA9.dpuf

Related

தலைப்பு செய்தி 780293995775645569

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item