நடுக்கடலில் தத்தளிக்கும் மியான்மார், வங்கதேச அகதிகளைத் தேடும் பணியில் இந்தோனேசியா!
உள்நாட்டு சட்ட திட்டங்கள், அடக்குமுறைகள், பஞ்சம் மற்றும் வன்முறைகள் காரணமாக பங்களாதேஷில் இருந்தும் மியான்மாரில் இருந்தும் படகுகளில் ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_631.html
![]() |
உள்நாட்டு சட்ட திட்டங்கள், அடக்குமுறைகள், பஞ்சம் மற்றும் வன்முறைகள் காரணமாக பங்களாதேஷில் இருந்தும் மியான்மாரில் இருந்தும் படகுகளில் அதிகளவு எண்ணிக்கையில் வெளியேறி வரும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட ஏனைய அகதிகள், மிகப் பெரும் எண்ணிக்கையில் சமீப காலமாக அவர்களை அழைத்துச் சென்ற ஆள்கடத்தல் கும்பல்களால் கைவிடப் பட்டு நடுக்கடலில் உணவு, குடிநீர் இன்றி தத்தளித்து வருகின்றனர்.
இந்த அவல நிலையின் தீவிரம் அதிகரித்ததை அடுத்து இவ்வாறு கைவிடப் படும் குறித்த ஆயிரக் கணக்கான அகதிகளை மீட்கும் மலேசியக் கடற்படையின் செயற்திட்டத்தில் தற்போது இந்தோனேசியாவும் இணைந்துள்ளது. சமீபத்தில் மியான்மாரில் அதிபர் தெயின் செயின் புதிய குடும்பக் கட்டுப்பாட்டு சட்டத்தில் கையெழுத்திட்டதை அடுத்து அங்கு சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மியான்மாரில் இருந்து அவர்கள் ஆயிரக் கணக்கில் படகுகள் மூலமாக தஞ்சம் தேடி வெளியாகி வருவதுடன் எந்தவித ஆதரவும் இன்றி நடுக்கடலில் பட்டினியால் உயிரிழக்கும் நிலைக்கும் தள்ளப் பட்டுள்ளனர். உலகில் அடக்குமுறை அதிகம் திணிக்கப் பட்டுள்ள சிறுபான்மை இனங்களில் ஒன்றாக ரோஹிங்கியா முஸ்லிம்களை ஐ.நா பிரகடனப் படுத்தியுள்ளதுடன் இவர்களது பிரச்சினை தொடர்பில் அவசியமான முடிவை விரைவில் எடுக்குமாறு சர்வதேசமும் மியான்மார் அரசுக்கு அழுத்தம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களில் மட்டும் 3500 ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்களாதேஷ் அகதிகள் இந்தோனேசிய மற்றும் மலேசிய கடற்கரைக்கு அண்மையில் தத்தளித்த நிலையில் மீட்கப் பட்டுள்ளனர். ஆனால் இன்னமும் கிட்டத்தட்ட 3000 அகதிகள் நடுக்கடலில் தத்தளித்து வருவதாகக் கணிக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மியான்மார் கடற்படை வெள்ளிக்கிழமை 208 வங்கதேச அகதிகளை ராக்கைன் மாநிலத்துக்கு அண்மையில் ஆள்கடத்தல் கும்பல்களிடம் இருந்து மீட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது |