மைத்திரிக்கு தொடரும் நெருக்கடிகள்
மைத்திரி - ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்திலிருந்து, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் 10 அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவிகளை ராஜினாமா ...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_780.html
அமைச்சரவை அந்தஸ்துள்ள சில அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களே இவ்வாறு தமது பதவிகளை ராஜினாமா செய்யவுள்ளனர்.
இவர்களில் முதலில் ஐந்து அமைச்சர்கள் தமது பதவிகளை ராஜினாமா செய்வர். தொடர்ந்து ஏனைய ஐந்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறுவர் என சிறிலங்கா சுதந்திர கட்சியை ஆதாரம் காட்சி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரி ஆதரவுக் கூட்டம் ஒன்றை அனுராதபுரத்தில் நடத்த மஹிந்த ஆதரவாளர்கள் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஆதரவுக் கூட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சிறிலங்காவில் விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி தாவல்களும் கூட்டணி அமைக்கும் வியூகங்களும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.