மற்றுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த சதி!

இலங்கைத் தீவில் மற்றுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாசகார செயலை அடுத்த மாதத்தில்...

இலங்கைத் தீவில் மற்றுமொரு இனக்கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த தரப்பு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாசகார செயலை அடுத்த மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக மஹிந்த தரப்புக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜூலை மாதம் ஏற்கனவே தமிழர் வாழ்வில் இரத்த வடுவை ஏற்படுத்திய மாதமாகும். மீண்டும் அவ்வாறாதொரு மாதத்தில் ஆரம்பிக்க மஹிந்த தரப்பு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய சில கட்டங்களாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ள கறுப்பு ஜூலைத் திட்டத்தின் அடுத்த சில திட்டங்கள் எதிர்வரும் சில வாரங்களில் நடைமுறைப்படுத்த மஹிந்த தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை மாதத்தில் ஏதோ ஒரு வகையில் மோதல் நிலையொன்றை ஏற்படுத்திவிட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கொந்தளிப்படையச் செய்ய முடியும் என மஹிந்த தரப்பு நம்புகிறது.

இத்திட்டத்தின் முதற்கட்டம் தாயகத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் தமிழீழ தேசிய கொடி பறந்ததாக மஹிந்த தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தினால் யுத்த வெற்றியினை நினைவு கூறுவதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பாடசாலை மாணவியின் கொலை வழக்கின் சந்தேக நபரை வெளியிட்டு பொது மக்களிடையே ஆத்திரத்தை உண்டு பண்ணும் நோக்கத்திலும் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை நாட்டில் இதற்கு முன்னர் இவ்வாறான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன எனினும் இந்தச் சம்பவத்தினை இனவாத ரீதியாக செயற்பாடென பிரச்சாரத்தை பரப்புவதற்கு சமூக வலைத்தளங்களை அவர்கள் தற்போது மிகப்பெரியளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

மஹிந்த தரப்புக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகப்புத்தகம் போன்றவையினாலும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதோடு ஊடகப் பிரிவுகளை ஸ்தாபித்து இந்தப் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ராஜபக்சவிற்கு நெருக்கமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் பதவி கவனவை நனவாக்குவதற்கு இலகுவான முறையில் மக்களிடத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இனவாதத்தைத் தூண்டி விடுவதற்கே மஹிந்த தரப்பினர் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related

தலைப்பு செய்தி 4173093562098813949

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item