சிங்களவர்களின் ஹீரோவாக மாறும் நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸவின் அரசியல் அணுகுமுறைகள் சரியான வழியில் செல்வதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க புகழாரம் சூட்டியுள்ளார்....


மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்ஸவின் அரசியல் அணுகுமுறைகள் சரியான வழியில் செல்வதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க புகழாரம் சூட்டியுள்ளார்.

இன்றைய அரசியல் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் நாமல் ராஜபக்ஸ செயற்பட்டு வருகிறார்.

நீதிமன்றினால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விடயத்திலும் நாமல் ராஜபக்ஸ பங்கேற்கவில்லை. மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய நாமல் அவ்வாறு நடந்து கொள்ளவதாக இருக்கலாம்.

தேவையற்ற கூட்டங்கள், போராட்டங்கள், சர்ச்சைக்குரிய மேடைகளில் நாமல் ராஜபக்ஸ இதுவரையில் ஏறவில்லை.

நாமல் ராஜபக்ஷ மூளையைப் பயன்படுத்தி அரசியல் செய்து வருகின்ற போதிலும் அவரது தந்தையின் ஆதரவாளர்கள் சிலர் உணர்வுகளைப் பயன்படுத்தி அரசியல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ஆட்சியில் இருந்த போது, தனக்குப் பின்னரான காலப்பகுதியில் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கும் நோக்கில் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

தலைப்பு செய்தி 1956017070152288185

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item