ரோஹித்த விவாதத்திற்கு வருவார் என பயந்து ரஞ்சன் தனது தங்க ஆபரணங்களை ஒழித்துக்கொண்ட விதம்
தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அன்றைய தினம் விவாதத்தில் கலந்து கொள்ளவிருந்த ரோஹித்த அபேகுண...

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்ற பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அன்றைய தினம் விவாதத்தில் கலந்து கொள்ளவிருந்த ரோஹித்த அபேகுணவர்தன மீதான அச்சத்தில் ரஞ்சன் தனது தங்க ஆபரணங்களை ஒழித்து வைத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன அதில் பங்கேற்கமாட்டார் என தெரியவந்ததும் ரஞ்சன் ராமநாயக்க அவ்விவாதத்திற்கிடையில் மீண்டும் தனது மோதிரம் மற்றும் தங்கச்சங்கிலியை அணிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான் உண்மையிலேயே ரோஹித்த அபேகுணவர்தன வருவதினாலேயே தங்கச்சங்கிலியை கழற்றி வைத்து விட்டு வந்தேன்.
தம்பி அந்த சங்கிலியை இப்போது கொண்டு வந்து தாருங்கள். இப்போது நிச்சமயாக தெரியும் தானே கழற்றமாட்டேன் என்று.
நான் உண்மையில் அச்சத்துடனயே வந்தேன்.
ஏனெனில் ரயில்களில் சங்கிலிகளை பறித்து கொள்வார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அரசியல் நிகழ்ச்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி உறுப்பினர்கள் வருவதை தடுப்பதற்கு கட்சியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தாம் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன, மற்றும் அருந்திக்க பெர்ணான்டோ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.