கொழும்பு துறைமுக நகர் திட்டம் மீளவும் முன்னெடுக்கப்படும்: இந்திய ஊடகம்
கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் மீளவும் முன்னெடுக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 1.4 பில்லியன் அமெரிக...


1.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த திட்டத்திற்கு சீனா நிதி உதவி வழங்குகின்றது.
இந்த திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் புதிய குழுவொன்றை நியமித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரது தலைமையில் இந்தக் குழு இயங்க உள்ளது.
இந்த புதிய குழு நியமிப்பது குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
இதேவேளை, அபிவிருத்தித்திட்டத்தினால் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறி நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
எவ்வாறெனினும்ää அபிவருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக இந்திய ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.