வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்: சாந்தனி பண்டார
புங்குடிதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சாந்தனி பண்டார தெர...


மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
வித்தியா கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றப் பொறிமுறைமைக்கு அமைவாக குற்றவாளிகளை தண்டிக்கத் தேவையான சாட்சியங்களை பகல் இரவு பாராது திரட்டி வருகின்றனர்.
வித்தியாவை கொலை செய்தவர்களை தண்டிக்கும் நோக்கில் நிறுவப்பட உள்ள விசேட நீதிமன்றின் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் சாந்தனி பண்டார தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் தற்போதைய நிலைமை குறித்து ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவுபடுத்திய போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.