20ம் திருத்தச் சட்டத்திற்கு 151 உறுப்பினர்கள் ஆதரவு
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த 20ம் திருத்தச் சட்டத்திற்கு 151 உறுப்பினர்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்...
http://kandyskynews.blogspot.com/2015/05/20-151.html

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 151 உறுப்பினர்கள் உத்தேச 20ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்னளர்.
இதனால் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இன்றியே 20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் தேர்தல் முறைமை மாற்றம் குறித்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
சிறு கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனால் கட்சித் தலைவர்களுடன் மீளவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நாடாளுமன்றில் உத்தேச திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate