விசாரணைக்கு ஆஜராக முடியாது!- சஷி வீரவன்ச
பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் நேற்று ஆஜராக முடியாது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச அறிவித்துள்ளதாக பொலிஸார்...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_329.html

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யவென சஷி வீரவன்சவை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு நேற்று அழைத்திருந்தது.
எனினும் நேற்று தன்னால் வர முடியாது என்றும் வேறு தினம் ஒன்றை வழங்குமாறும் சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு அறிவித்துள்ளார்.
மற்றுமொரு தினம் வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீரவன்சவின் மனைவிக்கு திடீர் சுகயீனம் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவு, நேற்று காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர் அங்கு ஆஜராகவில்லை.
உடல் நிலை சரியில்லாத காரணத்தினாலே அவர் கொழும்பு நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.