மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் மத்திய அரசிற்கு பரிந்துரை
திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_7.html

திருகோணமலை மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகள் தொடர்பில் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் தெரித்தார்.
வைத்தியசாலையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி கடந்த 6 நாட்களாக தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
வைத்தியசாலையில் காணப்படும் பௌதீக மற்றும் ஆளணிப்பற்றாக்குறையினால் தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில் இதுவரை எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர்.