இறக்குமதியாகும் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விசேட விற்பனை வரி குறைப்பு
இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட விற்பனை வரி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இ...


இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட விற்பனை வரி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு அறவிடப்பட்ட 55 ரூபா விசேட விற்பனை வரி, 30 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டது.
அத்துடன், பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராமிற்கு அறவிடப்பட்ட 30 ரூபா விசேட விற்பனை வரி 10 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது.
சந்தையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகள் உயர்வடைந்துள்ளமையால், நுகர்வோர் எதிர்நோக்கியுள்ள அசௌகரியங்களைக் கவனத்திற்கொண்டு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.