நியூஸிலாந்து அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் வேண்டுகோள்
நியூஸிலாந்து அரசாங்கம் தம்மைப் பொறுப்பேற்க வேண்டும் என இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் வேண...


இந்த வேண்டுகோளை முன்வைத்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட 64 பேரின் கையொப்பத்துடன் நியூஸிலாந்து அரசாங்கத்திற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கடல் மார்க்கமாக நியூஸிலாந்திற்குச் செல்ல முயற்சித்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மறித்து திருப்பி அனுப்பியிருந்தனர்.
இதன்போது, இந்தோனேஷியாவை அண்மித்த கடற்பரப்பில் நிர்க்கதியாகியிருந்த அவர்கள் காப்பாற்றப்பட்டு அங்குள்ள தீவொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 54 பேரும் தொடர்ந்து குறித்த தீவிலுள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை இந்தோனேஷியாவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த குமார நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தினார்.