பர்மா முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க முக்கிய அமைப்புக்களை சந்திக்கிறார் அமைச்சர் ரிஷாத்…!

இலங்கைக்குள் 1990 ஆம் ஆண்டு தமது தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நான் உட்பட எமது வடமாகாண முஸ்லிம் சமூகம் அனுபவித்த அகதி வாழ்வு எவருக்கு...

myanmar-rohingya-e1368525070185
இலங்கைக்குள் 1990 ஆம் ஆண்டு தமது தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நான் உட்பட எமது வடமாகாண முஸ்லிம் சமூகம் அனுபவித்த அகதி வாழ்வு எவருக்கும் எங்கும் ஏற்படக் கூடாது என்று எண்ணும் எமக்கு எமது சகோதர ரோஹிங்யோ முஸ்லிம்கள் எதிர் கொண்டுவரும் துயர் சம்பவங்கள் மனதில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இது தொடர்பில் எமது அளுத்தத்தை உரிய அரசுக்கு வழங்கும் வகையில் இலங்கையில் உள்ள முக்கிய அமைப்புக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு தெளிவை வழங்கிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுவரும் நிலையில் இலங்கையில் நீண்ட காலமாக அகதிகளாக வாழும் முஸ்லிம் சமூகத்தின் அங்கமாக இருக்கின்றவன் என்ற படியால் இடம் பெயர்வு மற்றும் முகாம் வாழ்வு என்பன பற்றி தெளிவாக அறிவை கொண்டுள்ளதாகவும் பர்மா மியன்மார் தொடர்பில் கவனம் செலுத்துவது எமது கடமையென்றும் அவர் கூறினார்.
இந்த மியன்மார் ரோஹிங்யோ முஸ்லிம்கள் இன்று எதிர் கொண்டுள்ள இழப்புக்கள்,மற்றும் இனச் சுத்திகரிப்புக்கள் அங்கீகரிக்கப்பட முடியாததொன்று என்பதை மனித நேயம் கொண்ட எந்த நாடும் ஏற்றுக்கொள்ளும் என்பதை உறுதியாக தாம் நம்புவதாகவும்,இலங்கையில் வாழும் முஸ்லிம்களும், துறைசார்ந்தவர்கள்,உயர் பதவி நிலைக் கொண்டவர்கள் இது தொடர்பில் என்ன நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளார்கள் என்பது தொடர்பிலும்,அதற்கான ஆரம்ப கலந்துரையாடல்கள் அவசியம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று ரோஹிங்யோ முஸ்லிம்கள் தமது தாயகத்தில் இருந்து தமது பாதுகாப்பை தேடி கடல் வழி மார்க்கமாக தென்னாசிய நாடுகளுக்கு பாதுகாப்பற்ற பயணங்களை மேற்கொள்வதால் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் பெரும் அளவு காணப்படுவது கவலையளிப்பதாகவும்,இஸ்லாத்தின் எதிரிகளின் வெறித்தாக்குதல்களில் இருந்து எமது பர்மா முஸ்லிம்களை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் என்ற பிரார்த்தனையினையும் செய்யுமாறும் இந்த நிலையில் இலங்கையில் வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் ஒரு இடம் பெயர்வுக்கு ஆளாக்கப்படுகின்ற துயர் மிகு சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்கவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுடன்,ரோஹிங்யோ முஸ்லிம்கள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் என்ன செய்யலாம் என்பது தொடர்பில் கருத்தாடல்கைள செய்வது காலத்தின் முக்கியத்துவமிக்கதொன்று என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 3883412026845911428

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item