வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி தினம் நாளை (13) என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. நாளை (13) நண்ப...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_948.html

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான இறுதி தினம் நாளை (13) என தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
நாளை (13) நண்பகல் 12 மணி வரை மாத்திரமே வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
எனவே உரிய நேரத்திற்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறு பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள அனைத்து கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.