அமெரிக்க அறிக்கையின் அடிப்படையில் புலிகள் மீள தலைதூக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது: அமில தேரர்
2014ம் ஆண்டு அமெரிக்க அறிக்கையின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவதாக நல்லாட்சிக்கான பி...


2014ம் ஆண்டு அமெரிக்க அறிக்கையின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவதாக நல்லாட்சிக்கான பிக்குகள் முன்னணியின் பிரதிநிதி தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் புலிகள் மீளவும் தலைதூக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
2014ம் ஆண்டு தொடர்பில் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றை மையமாகக் கொண்டே இந்தக் குற்றச்சாட்டுக்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த அமெரிக்க அறிக்கையானது மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான அரசாங்கம் தொடர்பான அறிக்கை அடுத்த ஆண்டிலேயே வெளியிடப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலத்தில் புலிகள் மீள ஒருங்கிணைவது ஆச்சரியப்படக்கூடிய விடயமல்ல.
கருணா அம்மான், குமரன் பத்மநாதன், தயா மாஸ்டர் போன்ற புலித் தலைவர்களை கடந்த அரசாங்கம் மடியில் வைத்து பராமரித்தது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் கால அறிக்கை நல்லாட்சி அரசாங்கத்திற்கு எந்தவகையிலும் பொருந்தாது என தம்பர அமில தேரர் தேசிய நூலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் தெரிவித்துள்ளார்.