நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பெயரைக் கேட்டவுடன் சிலர் நடுங்குகின்றனர்: அஜித் மான்னப்பெரும
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பெயரைக் கேட்டவுடன் சிலர் நடுநடுங்கிப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_445.html

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பெயரைக் கேட்டவுடன் சிலர் நடுநடுங்கிப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அன்று கிபீர் விமானங்களின் ஒலி கேட்டதும் புலிகளுக்கு ஏற்படும் பீதியைப் போன்று நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பெயரைக் கேட்டவுடன் கடந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடிகாரர்கள் அச்சமடைகின்றனர்.
அன்று எம்மீது புலி முத்திரை குத்திய சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் இன்று உண்மையை புரிந்து கொண்டு எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர்.
இன்று யானைச் சின்னத்தில் ஒரே கூட்டணியாக போட்டியிடுகின்றனர். நாம் செல்லும் பாதை சரியானது என்பது அவர்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தியும் மஹிந்தவினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை.
சம்பிக்க மட்டுமல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேடையில் ஏறி பிரச்சாரம் செய்வார்.
நகரசபைத் தலைவராக கடமையாற்றிய காலத்தில் கம்பஹாவை அபிவருத்தி செய்தேன். தற்போது கம்பஹா மாவட்டத்தையே அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியொருவர் தனது பதவிக் காலத்தில் தோற்கடிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் கடந்த ஜனவரி மாதத்தில் பதிவானது. முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே இவ்வாறு தோல்வியைத் தழுவியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சீதுவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate